பிரான்சில் மக்களின் மனநிலையை அறிந்து ஜனாதிபதி இம்மானுவேல் ஊரடங்கு பிறப்பிப்பார் என்று தெரியவந்துள்ளது.
பிரான்சில் கொரோனா தாக்கம் அதிகரித்து இருப்பதால் மூன்றாவது பொது முடக்கத்தை அறிவிப்பது குறித்து ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அமைச்சர்களுடன் கலந்து பேசி முடிவு எடுத்த பின் மக்களிடம் உரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர்கள் கூறியிருப்பதாவது, கொரோனா பாதுகாப்பு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி தற்போது மக்கள் முன் உரையாடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் ஒருவரும் பொது முடக்கத்தை தவிர வேறு வழி இருக்கிறதா? இல்லையா? என்பதை குறித்து உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எனவே நாட்டின் தற்போது நிலவிவரும் ஆறு மணி நேர ஊரடங்கால் ஏதேனும் நன்மை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா பரவியுள்ளது என்பதை ஆய்வு செய்து மக்களின் மனநிலையை அறிந்து ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பொது முடக்கம் தொடர்பாக முடிவெடுப்பார் என்று தெரியவந்துள்ளது.