Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் மாஸ் அறிவிப்பு… ஜெ., பிறந்த நாள் இனி அரசு விழா…!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி இனி  அரசு விழாவாக கொண்டாடப்படும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் நேற்று திறக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் சிலை மெரினா கடற்கரையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் மெரினாவில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அமைச்சர்கள் மரியாதை செலுத்துவர்.

Categories

Tech |