நுங்கப்பாக்கம் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் சீனிவாசன் என்ற காவலர் போதையில் அங்குள்ளவரை அடிப்பதாக கூறி பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
காவல்துறை மக்களின் நண்பன் எனபர்கள்.ஆனால் அதே முழுமையாக பொருந்தாமல் போவதுதான் வேதனையின் உச்சமாக இருக்கின்றது. சமூகத்தை பொறுப்புள்ளதாக கட்டமைக்கும் பொறுப்பு, பாதுகாக்கும் பொறுப்பும் காவல்துறை அதிகாரிகளையே சாரும் . சில நேரங்களின் அவர்களின் செயல்பாடுகள் தான் பொது மக்களையே முகம் சுளிக்க வைக்கிறது.
காவல் அதிகாரிகளின் இந்த செயல் சட்டத்தை பாதுகாக்கும் அவர்களுக்கே தலைகுனிவை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் குடித்து விட்டு ரோட்டில் செல்லும் பொதுமக்களை அடிக்கிறார் என்று பொதுமக்கள் ஒரு காலவரை பிடித்து அதை வீடியோ செய்துள்ளது வைரலாகி வருகின்றது. நுங்கப்பாக்கம் காவல்நிலையத்தில் வேலைப்பாக்கும் சீனிவாசன் என்ற காவலரைத்தான் பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.