மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி பகுதியில் சித்துவம்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி-ஆதிபராசக்தி தம்பதியினர். இவர்களுக்கு பவித்ரா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ரா காதல் திருமணம் செய்துகொண்டதால் அவரது தாயான ஆதிபராசக்தி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆதிபராசக்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆதிபராசக்தி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.