வீடு கட்டுவதற்கான மானியம் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது மற்றும் உங்களின் விவரங்களை செக் பண்ணுவது குறித்து பார்க்கலாம்.
நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம் வழங்கும் திட்டம் வழங்கிவருகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் PMAY Urban மற்றும் PMAY Gramin என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது:
இந்த திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற்றவராக இருந்தால் இத்திட்டத்தின் http://pmaymis.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
பின்னர் மெயின் மெனுவின் கீழ் உள்ள “Citizen Assessment” என்பதை கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
இதையடுத்து வரும் திரையில் விண்ணப்பதாரரின் ஆதார் விவரங்களைப் பதிவிட வேண்டும்.
பின்னர் உங்களின் தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரி போன்றவற்றுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு எல்லா விவரங்களையும் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும்.
உங்களின் விண்ணப்ப நிலவரத்தை “Track your Assessment Status” என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
செக் செய்வது எப்படி?
முதலில் பிஎம் ஆவாஸ் யோஜனா என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின்னர் “search beneficiary” என்பதைக் கிளிக் செய்யவும்..
அங்கு ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்களது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
இதையடுத்து உங்களது பெயரின் முதல் மூன்று எழுத்துக்களைப் பதிவிட வேண்டும். உதாரணமாக உங்களது பெயர் selvaraj என்றால் sel என்று பதிவிட வேண்டும்.
அதன் பின்னர் “show” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இப்போது பட்டியலில் உங்களுடைய பெயர் விவரம் காண்பிக்கப்படும்.
selvaraj என்ற பெயரில் நிறையப் பேர் இருந்தால் உங்களுக்குக் குழப்பம் ஏற்படும். அப்போது நீங்கள் ctrl + f அழுத்தி உங்களின் தந்தை பெயரைப் பதிவிட்டால் உங்களது விவரத்தை நீங்கள் பார்த்து கொள்ளலாம்.