இந்திய கிரிக்கெட் வீரரின் திருமண புகைப்படத்தை சன்ரைஸ் அணியினர் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கும், வைஷாலி விஸ்வேஸ்வரன் என்பவருக்கும் 2020 ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து சன்ரைஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சங்கரின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு “உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.