Categories
கல்வி தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு… CBSE 10,12 வகுப்புகளுக்கு… “தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 வெளியீடு”…!!

பிப்ரவரி 2-ம் தேதி சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 10-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகின்றன. ஜூலை 15-ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்கிடையே ”பொதுத் தேர்வுக்கு இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ள நிலையில் அட்டவணையை விரைவாக வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 2-ம் தேதி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |