Categories
உலக செய்திகள்

சுழட்டி அடித்த கொரோனா…! திணறும் அமெரிக்கா…. அதிரடி காட்டிய பைடன் …!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் தற்போது தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 151,879 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 3916 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணியினை தீவிரப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது பதவிக்கால முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்து உள்ளார்.

இதற்காக தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரப்படுத்தி கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளார். தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் உற்பத்தி ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர் அனைத்து மாகாணங்களுக்கும் வாராந்திர தடுப்பூசி வழங்குவதை 86 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த ஆண்டு கோடை கால இறுதிக்குள் 30 கோடி அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |