அமெரிக்காவில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் நடுக்காட்டில் குழந்தைகளை விட்டுச் சென்றதால் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நார்த் கரோலினா பகுதியை சேர்ந்தவர்கள் ஜேம்ஸ்-எமி ஹாரிசன் தம்பதியினர். இவர்கள் தங்களுடைய 7 வயது சிறுவன் மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் மிசிசிப்பி வழியாக டிராக்டர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே போதைப்பொருள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது.
இதனால் எமி வண்டியிலிருந்து கீழே இறங்கி ஜேம்ஸிடம் குழந்தைகளை விட்டுவிட்டு வேறு ஒரு நண்பரை வரவழைத்து வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின் ஜேம்ஸும் குழந்தைகளை டிராக்டர்லியே நடுக்காட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின் தனியாக காட்டுக்குள் இருந்த குழந்தைகள் உதவி தேடி சென்றனர். செல்லும் வழியில் இருவரும் பிரிந்தனர்.
அப்போது சிறுவன் ஒரு வேட்டைக்காரனின் உதவியை கேட்டான். அவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார் அவர்கள் வந்த டிராக்டரை கண்டுபிடித்தனர். டாக்டரின் அருகில் இரண்டு வயது குழந்தையின் சடலத்தை மீட்டனர். அதன்பின் விசாரணை செய்ததில் கணவர் மனைவிக்கிடையே தகராறில் இருவரும் குழந்தைகளை காட்டுக்குள் தனியாக விட்டுச் சென்றது தெரியவந்தது.
இதனால் 2 வயது குழந்தை இறப்புக்கு காரணமாக இருந்த தாயை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜேம்ஸ் எங்கு சென்றார் என்பது குறித்து தகவல் கிடைக்காததால் அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.