ஓட்ஸ் பழ சாலட் செய்ய தேவையான பொருட்கள் :
மாம்பழம், ஆப்பிள் – அரை கப் (நறுக்கியது)
பேரீச்சைப்பழம் – கால் கப் (நறுக்கியது)
மாதுளை, வாழைப்பழம் – அரை கப் (நறுக்கியது)
பால் – 2 கப்
ஓட்ஸ் – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை
தேன் – 2 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 2 மேசைக்கரண்டி
செய்முறை :
முதலில் மாம்பழம், ஆப்பிள் பழத்தை எடுத்து விதைகளை நீக்கியபின், அதனுடன் பேரிச்சம்பழம், வாழைப்பழத்தை தேவையான வடிவத்தில் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு மாதுளை பழத்தின் தோலை நீக்கியபின்,அதிலுள்ள முத்துக்களை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்ததும், அதனுடன் ஓட்ஸ்,தேவையான அளவு உப்பைச் சேர்த்து சில நிமிடம்கொதிக்க விட்டு, ஓட்ஸ் நன்கு குலைந்ததும், இறக்கி ஆற வைத்து கொள்ளவும்.
பின்னர் ஆற வைத்த ஓட்ஸுடன் நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், பேரிச்சம்பழம், வாழைப்பழம், மாதுளை பழ முத்துக்கள், திராட்சை, சிறிதளவு தேன் சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி விட்டு, சில மணி நேரம் கழித்து, அதை சிறிய பவுலில் ஊற்றி பரிமாறினால், ருசியான ஓட்ஸ் பழ சாலட் ரெடி.