Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையை மகிழ்வித்த தெப்பத்திருவிழா…. “மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அற்புதக் காட்சி”…!!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெறும். நிகழாண்டில் ஜனவரி 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

தெப்பத்திருவிழா உற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வருவார். திருவிழாவின் பத்தாவது நாளான செவ்வாய்க்கிழமை தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்வும், 11-ஆம் நாளான புதன்கிழமை மதுரையை அடுத்த சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு நிகழ்வும் நடைபெற்றது.

Categories

Tech |