Categories
உலக செய்திகள்

இந்த 30 நாட்டில் இருந்து வந்தால்…. 10நாட்களுக்கு லாக் பண்ணுங்க…. பட்டியல் போட்ட பிரிட்டன் பிரதமர் …!!

பிரிட்டன் அரசாங்கம் கொரோனா பரவகூடிய அபாயம் உள்ளதாக சுமார் 30 நாடுகளை அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரசு அங்கோலா, அர்ஜென்டினா, பொலிவியா, போட்ஸ்வானா, பிரேசில், கேப் வெர்டே, சிலி, கொலம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈக்வடார், ஈஸ்வதினி, பிரஞ்சு கயானா, கயானா, லெசோதோ, மலாவி, மொரிட்டியஸ், மொசாம்பிக், நமீபியா, பனாமா, பராகுவே, பெரு, போர்ச்சுகல் , தென்னாப்பிரிக்கா, சுரினாம், தான்சானியா, உருகுவே, வெனிசுலா, சாம்பியா, ஜிம்பாப்வே போன்ற

30 நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஓட்டல்களில் சுமார் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தபட்டு பின்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், புதிய கொரோன வைரஸ் ஏதாவது ஒரு நாட்டிலிருந்து கண்டறியப்பட்டால் நிச்சயமாக உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கொரோனா தாக்கம் இங்கிலாந்தில் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் குறிப்பிட்ட இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தங்களை தனிமைப்படுத்திகொள்ள முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

Categories

Tech |