Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் காதலில் விழுந்துள்ளார்… Birthday girl ஸ்ருதிஹாசன்…!!

இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலில் விழுந்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்து வருவர் ஸ்ருதிஹாசன். இவருக்கு சமூக வலைதளங்களிலும், அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். ஸ்ருதியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது என்று அண்மையில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த முறை நான் என் பர்சனல் வாழ்க்கை பற்றிய விவரங்களை எதுவும் கூற மாட்டேன் என்று ரகசியமாக வைத்துள்ளாராம்.

எனது அப்பாவும் அம்மாவும் மிகவும் பிரபலம் என்பதால் தான் அவரது வாழ்க்கை பற்றிய விஷயங்கள் பர்சனலாக இல்லை. ஆனால் நான் எனது வாழ்க்கை பற்றிய விவரங்களை பர்சனலாக வைத்திருக்க விரும்புகிறேன். இதற்கு முன்னதாக ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேலை காதலித்தார்.அவருக்காக தனது கேரியரில் கூட கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். பின்னர் அவரைவிட்டு பிரிந்தவுடன் தான் தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது ரவி தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் கடந்த 9ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த குஷியில் பர்த்டேவை கொண்டாடிவருகிறார்.

Categories

Tech |