Categories
மாநில செய்திகள்

“10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு”…? பள்ளிகளுக்கு அனுப்பட்ட முக்கிய சுற்றறிக்கை…. என்ன தெரியுமா..?

பனிரெண்டாம் வகுப்பை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விவரங்களைய பதிவு செய்யுமாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது :

பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், ஜாதி, மதம், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்றுத்திறனாளி வகை, மொபைல் போன் எண், பாடத்தொகுப்பு, பயிற்று மொழி போன்ற பல்வேறு வகையான தகவல்களை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த விவரங்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை இணையதளம் வழியே பதிவு செய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட படி பெயர் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த மாணவர்களுக்கு 2021 மார்ச் 1ல் கட்டாயமாக 14 வயது பூர்த்தியாக வேண்டும் என்று கூறியுள்ளார். மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின் பிறந்த தேதி மாற்றம் கோரினால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.  மொபைல் எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும். அதில் தான் தேர்வு குறித்த விவரங்கள், அனுப்பப்படும். இந்த விபரங்கள் அனைத்தையும் பிப்., 1 முதல், 11ம் தேதிக்குள் அரசு தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

Categories

Tech |