சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு வார விழா அரியலூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் அவர் பேசிய போது “வாகனங்கள் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எச்சரிக்கை பலகைகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். மேலும் அரியலூரை விபத்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.” எனவும் கூறினார்.
முன்னதாக இளநிலை பொறியாளர் எழிலரசன் வரவேற்றார். உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். மேலும் அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கினார்கள்