தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மக்களை அதிமுக ஏமாற்றி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மக்களை அதிமுக ஏமாற்றி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை பினாமிகள் மூலம் வழக்குப்போட்டு தடுத்தவர் ஸ்டாலின் என முதல்வர் கூறுகிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்த முதல்வர், அது பற்றி கண்டுகொள்ளவில்லை. கடலூரை சேர்ந்த அமைச்சர் சம்பத் ஆயிரம் பேருக்கு வேலை தரும் ஒரு ஆலையை மாவட்டத்தில் கொண்டு வந்தாரா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.