வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் சில பொருள்களை தூக்கி போடாதீர்கள். அதை இப்படி பயன்படுத்துங்கள். உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
உங்கள் வீட்டு பூஜையறையில் குட்டி குட்டி சாமி படங்களை வைத்து நீங்கள் பூஜை செய்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஒரு சிறிய டிப்ஸ். அதாவது உங்கள் வீட்டில் தீர்ந்துபோன பேனா மூடிகள் இருந்தால் அதை அந்த குட்டி போட்டோ பின் ஒட்டி விடுங்கள். அதில் நீங்கள் சாமி படத்திற்கு பூ வைக்க வேண்டுமென்றால் அந்த பாட்டில் ஓட்டையில் சொருகி விடலாம். பூக்களும் கீழே விழாது. இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.
அடுத்தது சோப்பில் தண்ணீர் பட்டு விரைவில் கரைந்து விடுகிறது. ஒரு எளிய டிப்ஸ் சோப்பு டப்பாவில் இரண்டு ரப்பர்கலை எடுத்து அதில் சுற்றிக் கொள்ளுங்கள். அந்த ரப்பர் மேல் சோப்பை வையுங்கள். சோப்பு தண்ணீர் விழுந்தாலும் கொழகொழவென ஆகாமல் இருக்கும்.
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் குக்கரின் உள்பக்கம் கரை இருக்கிறதா அதை சுலபமாக நீக்குவது எப்படி என்றால், ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். அதில் சாதாரணமாக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் ஒரு டீஸ்பூன் கல் உப்பு மற்றும் அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு அந்த தோலையும் உள்ளே போட்டு விடுங்கள். பின்னர் அந்த எலுமிச்சை தோலை வைத்து நன்றாக தேய்த்து கழுவினால் கரை சுத்தமாக நீங்கி விடும்.