Categories
அரசியல் மாநில செய்திகள்

பிளீஸ்! இந்த இரண்டு நிகழ்வையும்…. ஒன்றாக பார்க்க வேண்டாம் – கடம்பூர் ராஜு பேச்சு…!!

சசிகலா விடுதலையையும், ஜெ., நினைவிட திறப்பு விழாவையும் ஒன்றாக பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெ., மட்டுமே தலைவர்களுக்கு மணிமண்டபங்கள் கட்டினார்

அவர்தான் தலைவர்கள் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டார். மேலும் வேதா இல்லத்தை மக்கள் விரைவில் பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்னரே வேதா இல்லம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நிகழ்வையும், சசிகலா விடுதலையானதும் ஒன்றாக பார்க்க வேண்டாம் என்றும், ஜெயலலிதா நினைவிடம் திறப்புக்கு கூடிய கூட்டம் தற்செயலாக  கூடியது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |