ராகுல்காந்தி தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட சிறுமியின் மேலாடையை சரிசெய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 23, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோவை, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட சிறுமியை பிரச்சார வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்துள்ளார். அப்போது அந்த சிறுமியை வாகனத்தில் ஏறுவதற்கு உதவி செய்ததுடன், ஏறும் போது அவருடைய மேலாடை சரியாக இல்லாததால் அதை சரி செய்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகளை குமார் துரைசாமி என்பவர் பதிவிட்டுள்ளார். சிறுமியின் செல்பி ஆசையை நிறைவேற்ற வாகனத்தின் மீதுஏற்றிய போது சற்று விலகிய சிறுமியின் மேலாடையை சரிசெய்ததில் அடங்கியுள்ளது “ராகுலின் உள்ளார்ந்த மனிதமும், நிறைந்த அன்பும், அக்கறையும்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சிறுமியின் செல்பி ஆசையை நிறைவேற்ற வாகனத்தின் மீது தன்னிடம் அழைத்துக்கொண்டபோது சற்று விலகிய சிறுமியின் மேலாடையை கணநேரத்தில் சரிசெய்ததில் அடங்கியுள்ளது @RahulGandhi ராகுலின் உள்ளார்ந்த மனிதமும் , நிறைந்த அன்பும் , அக்கறையும். pic.twitter.com/5a9W3znuB2
— Kumar Duraiswamy (@KumarDuraiswamy) January 27, 2021