Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாயை கொன்ற மகன்…. மருத்துவமனையில் சிகிச்சை… தற்கொலை செய்து கொண்ட கைதி…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கைதி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகரசம்பட்டி தொகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திருமணமாகாத முத்துவேல் கடந்த ஆண்டு சொத்து தகராறில் தனது தாயை கொலை செய்து விட்டார். இச்சம்பவம் குறித்து விசாரித்த நாகரசம்பட்டி போலீசார் முத்துவை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் உள்ள ஒரு கட்டிடத்திலிருந்து முத்துவேல் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனையடுத்து பலத்த காயமடைந்த முத்துவேலை போலீசார் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கைதிகளுக்கான அறையில் போலீஸ் பாதுகாப்புடன் முத்துவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கூறியதால் போலீசார் முத்து வேலை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது இரண்டாவது மாடியில் இருந்து முத்துவேல் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பரிசோதனைக்கு பின்பு முத்துவேலின் உடலானது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |