Categories
பல்சுவை

நாடாளுமன்றம் என்றால் என்ன….? எப்படி உருவானது….?

நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்றம் என்றால் என்ன என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு.

பார்லிமென்ட் அதாவது நாடாளுமன்றம். நாடாளுமன்றம் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அமைப்பு சபையாகும். இந்திய ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. ஒன்று மேலவை எனப்படும் ராஜ்யசபா மற்றொன்று மக்களவை எனப்படும் லோக்சபா ஆகும். டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரின் வரைவுகுழுதான் முதன்முதலாக நாடாளுமன்ற முறையிலான அரசாங்கத்தை பாரிந்துரை செய்தது.

26 ஜனவரி 1950ல் முதல் முதலாக இந்திய ஜனநாயகம் மலர்ந்தது. மேலும் இந்தியா குடியரசாக உருபெற்று நாடாளுமன்றம் தோன்றியது. நாட்டின் வரவு செலவு கணக்குகள் மற்றும் சட்டத் திருத்தங்கள் இவற்றிற்கு நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் பொறுப்பாகின்றது. பாராளுமன்றத்தின் கட்டுபாட்டின் கீழ் வரும் துறைகளானது போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு, வங்கிகள், ரயில்வேகள், வெளியுறவுத் துறை, பாதுகாப்பு, சுங்கம், சுங்கவரித்துறை மேலும் பல. பட்ஜெட் கூட்டத்தொடர் தான் நாடாளுமன்ற நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.

இக்கூட்டத்தொடரில்தான் நாட்டின் வரவு செலவுகள் குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படுகின்றன. பொதுவாக ஒரு வருடத்திற்கு மிக முக்கியமாக மூன்று கூட்டத்தொடர்கள் நடக்கின்றன. பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி முதல் மே, மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை, குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் முதல் டிசம்பர் வரை.

Categories

Tech |