ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 29ஆம் தேதி தேசிய நாளிதழ் தினமாக கொண்டாடப்படுகிறது. நாளிதழ் என்றால் உள்ளங்கையில் கண்ணாடி என்று கூறலாம். உலகத்தையே கையில் கொண்டு வருவது தான் நாளிதழ். சமூக வலைதளங்களில் கூட செய்திகளை பார்த்துக்கொள்ளலாம் என்று உங்களுக்கு கேள்வி எழும். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளில் இப்போதெல்லாம் ஆழமான கருத்துக்கள் இருப்பதில்லை.
சில நேரங்களில் அவை பொய்யான தகவல்களையும் கொடுக்கின்றது. ஆனால் உலகம் முழுவதிலும் என்ன நடக்கிறது என்பதை நாளிதழ் தான் உண்மை தன்மை மாறாமல் சொல்கிறது. நாளிதழ் படிப்பதனால் சிந்தனைத்திறன் மேலோங்குவதோடு, செயல்திறனும் அதிகரிக்கும், பொது அறிவு, உலக அறிவு, தொழில் சார்ந்த தகவல்கள் போன்றவை நாளிதழ் படிப்பதால் நாம் கிடைக்கும் நன்மைகள்.