புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தது ஏன் என்று விளக்கமளித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தற்போது பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், துணிச்சலாக முடிவு எடுக்கும் பிரதமராக மோடி இருக்கிறார். நாராயணசாமியால் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றுள்ளது. புதுச்சேரியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்தேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.