சென்னையின் பெருமையைப் போற்றும் வகையில் நம்ம சென்னை என்ற செல்ஃபி ஸ்பாட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக சென்னையின் அடையாளமாக இளைஞர்களை கவரும் விதமாக ஒரு இடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் 24 லட்சம் செலவில் மெரினா கடற்கரையில் ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் நம்ம சென்னை செல்பி மையம் அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தன.
இந்நிலையில் சென்னையின் பெருமையைப் போற்றும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி ஸ்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்த செல்ஃபி ஸ்பாட் சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்குவதுடன், மெரினாவுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நினைவாக செல்பி எடுத்து மகிழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.