திருப்பூர் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 10 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிளுக்கு அருகில் வனப்பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கொரோனா ஊரடங்காள் கடந்த 10 மாதங்களாக இந்த அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் பஞ்சலிங்க அருவியில் 10 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.