கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பூரண குணமடைந்து அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மையார் சசிகலா நடராஜன் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று அக்கறையோடு அறிக்கை விட்டவர் “இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல. என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு” என்று குறிப்பிட்டுள்ளார்.