மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி கலவரத்தில் முடிந்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் ராகுல் காந்தி விவசாயிகள் போராட்டத்தை மனதில் வைத்து ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில,
அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பக்கம் தான் நான் இருக்கப்போகிறேன். எந்த பக்கம் செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது தான் என ராகுல் காந்தி ட்விட்செய்துள்ளார்.
एक साइड चुनने का समय है।
मेरा फ़ैसला साफ़ है। मैं लोकतंत्र के साथ हूँ, मैं किसानों और उनके शांतिपूर्ण आंदोलन के साथ हूँ।
— Rahul Gandhi (@RahulGandhi) January 28, 2021