Categories
லைப் ஸ்டைல்

கண் எரிச்சலால் அவதியா?… மிக எளிய டிப்ஸ் இதோ…!!!

அதிக கண் எரிச்சலால் அவதிபடுபவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு திரையை அதிகம் பார்ப்பதால் கண்களிலிருந்து கண்ணீர் வருவதோடு எரிச்சலும் உண்டாகிறது. எனவே கண்கள் எரிய ஆரம்பித்தால் அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். இல்லை என்றால் அது உங்களுக்கு தான் பிரச்சனை. அதனால் கண் எரிச்சல் நீங்க எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பில் வேலை செய்வதற்கு முன்பாக உங்கள் அறையில் உள்ள வெளிச்சத்தை கவனித்துக் கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியம்.

இருட்டு அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு லேப்டாப்பில் வேலை செய்யாதீர்கள். குறிப்பாக இரவில் இதை செய்ய வேண்டாம். படுத்துக்கொண்டும் லேப்டாப் பயன்படுத்தாதீர்கள். கண்களில் கை வைப்பது, கசக்குவது போன்றவற்றை செய்யாதீர்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது கண்களுக்கான ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். கண் எரிச்சல் அதிகமாக இருந்தால் உடனே குளிர்ந்த தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவுங்கள்.குளிர்ந்த நீரில் கண்களை அலசினால் கண்களில் எரிச்சலை உண்டாக்கும் தூசிகள் நீங்கி எரிச்சல் குணமாகும்.

அழுக்கான கையால் கண்களை எப்போதும் தொடக்கூடாது. ஒரு காட்டன் துணியை எடுத்து அதனை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களை மூடி அதன் மேல் வைத்தால் உடனே கண் எரிச்சல் குணமாகும். உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி அதனை கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கண்களில் ஏற்படும் எரிச்சல் உடனே நீங்கும். வெள்ளரிக்காயை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பிறகு அதனை வட்டமாக வெட்டி கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்தால் கண் எரிச்சல் குணமாகும்.

Categories

Tech |