உங்கள் சருமத்தை காக்கும் ரோஸ் வாட்டரில் உள்ள அற்புத நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். அப்படி அழகை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். உங்கள் வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால் அவற்றை தினமும் பயன்படுத்தி உங்கள் அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க லாம். ஏனென்றால் ரோஸ் வாட்டரை அவ்வளவு சக்தி உள்ளது. அதிலும் ரோஸ் வாட்டர் சருமத்தின் அழகை அதிகரிக்க மட்டுமின்றி முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள்.
அதனால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். மேலும் ரோஸ் வாட்டரை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நாள் முழுவதும் பல முறை சருமத்தை துடைத்து எடுத்தால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும். ரோஸ் வாட்டரில் புதினா சாற்றை கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால் பருக்கள் நீங்கும்.
மேலும் அனைத்து வகை சருமத்திற்கும் கண்களுக்கும் ரோஸ் வாட்டர் நன்மை அளிக்கிறது. முகப்பரு நீங்க, சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து குளிர்ச்சியாக வைக்க. பழுதடைந்த செல்களை புதுப்பிக்க, மேக்கப் ரசாயனங்களை நீக்க, எரிச்சலுற்ற கண்களை இதமாக்க சில துளிகள் கண்களில் விட்டால் போதும்.கண்களைச் சுற்றிய கருவளையங்கள் நீக்க என எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் ரோஸ் வாட்டர் உங்க மேக்கப் டேபிளில் எப்போதும் இருக்க வேண்டிய ஒன்று.