Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மரணம்தான் தீர்வா…?? எலி பேஸ்டை தின்ற வாலிபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

உடல் நலம் சரியில்லாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருந்தை கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் உள்ளார். இவர் பல மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும், உடல் நலம் சரியாகவில்லை. இந்நிலையில் ஆனைவாரி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற செல்வம் விரக்தியில் அங்கு இருந்த எலிபேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்து விட்டார்.

இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் சென்னை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |