பிறந்தநாளையொட்டி வாளால் கேக் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 25ஆம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சதீஷின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்த அவரது நண்பர்கள், 20க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சக்தி நகர் கோவில் முன்பு கேக் வெட்டியுள்ளனர். அப்போது அவரது நண்பர்கள் சதீஷை வாளால் கேக் வெட்டுமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவரும் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று வாலால் அந்த கேக்கை வெட்டினார். அதோடு இவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வாளால் கேக் வெட்டிய குற்றத்திற்காக போலீசார் சதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.