சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முதல் பகுதியாக போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ரயில் சேவை குறிப்பிட்ட அவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு தொடங்கியது. அதன்பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணிக்க அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை 9.31, 10.08, 10.56, 11.48, 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு-கடற்கரை இடையே 3 ஆம் தேதி காலை 10.55 மணிக்கும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை காலை 11.30, 12.20, 1.50 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது.