Categories
தேசிய செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மீள வழி இதுவே… ப.சிதம்பரம் கூறிய கருத்து…!!!

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதால் அது மீள இதுவே சிறந்த வழி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், “அடுத்த ஆறு மாதங்களுக்கு 30 சதவீத ஏழை மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கினால்தான் சந்தையில் தேவையின் பக்கம் அதிகரித்து, பொருளாதாரம் வளர்ச்சி அடையத் தொடங்கும். திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நிதியமைச்சர் அலங்கார பட்ஜெட்டை தாக்கல் செய்து விடுவாராரோ என அஞ்சுகிறோம். சமூகத்தின் பொருளாதார சமமின்மை இடைவெளி அதிகரித்து விட்டது. வறுமையில் இருந்த மக்கள் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |