Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்றவர்… சிறுமிக்கு நேர்ந்த துயரம்… கதறி அழுத பெற்றோர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்கையாபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஷ்ணு லட்சுமி என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களது மகள்  அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளதால், அங்கு தற்போது பூக்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதனால் தினமும் குடும்பத்துடன் சென்று வரதராஜன் பூக்களை பறித்து விட்டு அதன்பின் வீடு திரும்புவார். இந்நிலையில் குடும்பத்துடன் வழக்கம்போல் பூப்பறிக்கச் சென்ற போது, இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற விஷ்ணுலட்சுமி எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார்.

இதனையடுத்து நீண்ட நேரமாகியும் மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தனர். அப்போது கிணற்றில் அவரது செருப்பு மிதந்து கொண்டிருந்ததை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். அதன் பின் இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய லட்சுமியின் உடலை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குருவிகுளம் போலீசார் மாணவியின் உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |