பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவிற்கு,மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை 278 ஆக இருப்பதால் இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது.
மேலும் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பது ஆகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்த நிலையில், திடீரென அவர் உடல்நிலை மோசமடைந்து இருப்பதால் அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கவில்லை.