Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இ சேவை மையத்தில் வேலை… அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு இ சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இ சேவை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 04.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த இ சேவை மைய வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள tnega.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடவும்.

கல்வி தகுதி:
BE / B.Tech / MCA / M.Sc படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

முன்னனுபவம்:
ஒவ்வொரு பணிக்கும் தனி தனியாக முன்னனுபவம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:
ஆன்லைன் (Online)
தமிழ்நாடு இ சேவை மைய வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
tnega.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை தேர்வு செய்யவும்.
அவற்றில் “Tamil Nadu e-Governance Agency – Recruitment of GIS Professionals on Contract Basis”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

Categories

Tech |