முத்தலாக் சட்ட மசோதா மீண்டும் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது.
முஸ்லீம் மதத்தில் கணவன் அவரது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் அடுத்தடுத்து ‘தலாக்’ என்று 3 முறை கூறி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முஸ்லீம் மத சட்டத்தை தடை செய்யும் நோக்கத்தில் மோடியின் முந்தைய கால ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது முத்தலாக் சட்ட மசோதா. இதற்க்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற சட்டம் நீக்கப்பட்டடு இது மக்களவையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் பெரும்பான்மை இருக்கும் பாஜகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. சமீபத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் முத்தலாக் தடை மசோதாவும் காலாவதி ஆகிவிட்டது. இந்நிலையில் இன்று நடக்கும் மக்களவையில் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.