சவுரவ் கங்குலிக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் கங்குலிக்கு இரண்டாவது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.