ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவா காலமானார். அவருக்கு வயது 94. இவர் 1966-இல் மல்லிகை என்ற நவீன தமிழ் இலக்கிய இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று மாஸ்கோ சென்று வந்த இவர், எண்ணற்ற தமிழ் நூல்களை வழங்கியுள்ளார். அவருடைய மறைவிற்கு படைப்புலக ஆளுமைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.