தமிழ் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரான டோமினிக் ஜீவா வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரான டோமினிக் ஜீவா இன்று காலமானார். அவருக்கு வயது 94.இலங்கை யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அவிராம்பிள்ளை ஜோசப்- மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை யாழ்ப்பாணத்தில் அப்போது முடித்திருத்தகம் நடத்தி வந்தார். ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946-ல் நுழைந்தார் டொமினிக் ஜீவா. அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக இருந்த காலம். ப. ஜீவானந்தம் யாழ்ப்பாணத்துக்கு சென்ற போது அவருடன் இணைந்து கொண்டார் டொமினிக் ஜீவா.
அதுவரை டொமினிக் என்ற இயற்பெயருடன் ஜீவாவையும் இணைத்துக் கொண்டார்.
அவர் 1966 ஆம் ஆண்டு மல்லிகை என்ற நவீன தமிழ் இலக்கிய இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று மாஸ்கோ சென்று வந்த அவர், எண்ணற்ற தமிழ் நூல்களை வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு படையுலாக ஆளுமைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.