பெண் ஒருவர் தனது குழந்தையின் கண்களை பிடுங்கியும், நாவை அறுத்தும் சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் Josimare(30) என்ற பெண் தன்னுடைய மகளுடன் குளியலறைக்கு சென்று வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குழந்தையின் தாத்தா சென்று பார்த்தபோது குளியறையில் இருந்து ரத்தம் வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையின் இரு கண்களும் பிடுங்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதுள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
காவல்துறையினர் வந்து மயக்க மருந்து கொடுத்து அவரை கைது செய்துள்ளனர். அப்போது பாதி மயக்க நிலையில் இருந்த அவர் தன்னுடைய மகளுக்கு பேய் பிடித்துள்ளதால், தான் தன்னுடைய மகளின் கண்களையும், நாக்கையும் அறுத்து சாப்பிட்டதாக கூறியுள்ளார். ஏற்கனவே மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த இவரை கைது செய்த அதிகாரிகள் சிறையிலிருந்து மனநல மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருடைய மனநலம் குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.