ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தான் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இது அவருடைய ரசிகர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு அவருடைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், தன்னுடைய கணவருடன் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வழிபாடு நடத்தியுள்ளார். தன்னுடைய தாயார் லதா ரஜினிகாந்த் தொடங்கியிருக்கும் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய தந்தை பூரண நலம் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.