சசிகலாவை எளிதில் எடைபோட்டு விடக்கூடாது காத்திருங்கள் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “சசிகலாவை பற்றி இப்போது பேசுபவர்கள், அப்போது என்ன சொன்னார்கள்? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான், என்றும் பிரேமலதா விஜயகாந்தின் கருத்தை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அதிமுகவிற்கு பின்னால் பாஜக இருந்திருக்கிறது என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை என்று கூறியுள்ளார். அதிமுக சசிகளவிற்கு பின்னால் சென்று விடக்கூடாது என்பதில் மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவினர் கவனமாக இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் சசிகலாவை எளிதில் எடை போட்டுவிடக் கூடாது காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.