நீலகிரியில் நண்பன் குடிக்க பணம் தர மறுத்ததால் அடித்துக் கொலை செய்த கொலையாளிக்கு நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை, தங்கவேல் ஆகியோர் ஒரே அறையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர்.
ஒருநாள் தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது அருந்துவதாக 100 ரூபாய் கேட்டார். அதற்கு தற்போது என்னிடம் பணம் இல்லை என்று தங்கவேல் கூறியதால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த தர்மதுரை தனது நண்பனை தோசைகள் கல்லால் கடுமையாக தாக்கினார். பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தர்மதுரை கைது செய்தனர். உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் குற்றவாளியான தர்மதுரைக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும்,2000அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.