வருகின்ற 28_ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுகின்ற அறிவிப்பை தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து 13 சட்டமன்ற தொகுத்திருக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க. வும் வெற்றி வெற்றி பெற்று நூலிழையில் இந்த ஆட்சி காப்பாற்றப்பட்டது . அதிமுக ஆட்சி பெருன்பான்மையுடன் இருக்கின்ற சூழலில் தமிழக சட்டசபை கூட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் கூடிய தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த நிலையில் அதன் தொடர்சியாக அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதம் தள்ளிவைக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் பிப்ரவரி 14-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வருகின்ற 28_ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுகின்றது என்ற அறிவிப்பை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ளார். பரபரப்பான சூழலுடன் கூட இருக்கின்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், சபாநாயகர் ப.தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்து கொள்ள வாய்ப்புள்ளது. அதே போல தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் உள்ளிட்ட பிரச்சனையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.