அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்-4 விசா தடையை பைடன் அரசு நீக்கியுள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் ஊழியர்கள் கணவன் அல்லது மனைவிக்கு ஹெச்-4 விசா வழங்கப்படும். இந்நிலையில் அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான அரசு இருக்கும் போது பல்வேறு விசாவுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் தோல்வியை தழுவினார். இதையடுத்து வெற்றி பெற்ற பைடன் ஜனவரி 20ஆம் தேதியன்று அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் ட்ரம்ப் அரசு அமல்படுத்திய பல்வேறு தடைகளை பைடன் ரத்து செய்து வருகிறார். இதையடுத்து 2015ம் வருடம் வரை ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் சட்ட பூர்வமாக வேலை பெற முடியாமல் இருந்தது.
இதையடுத்து பாரக் ஒபாமா இந்த விசா வைத்துள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற அனுமதி அளித்தார். ஆனால் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு இந்த விசாவுக்கு தடை விதித்தார். இந்நிலையில் பைடன் அரசு ஹெச்-4 விசா கட்டுப்பாடுகளுக்கு ரத்து செய்துள்ளார். இதன் மூலம் இந்தியர்கள் மீண்டும் பணியில் சேர முடியும். இந்த விசா மூலமாக அதிகமாக பயன் பெறுவது இந்தியர்கள் தான். எனவே இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.