Categories
மாநில செய்திகள்

எஸ்சி, எஸ்டி, எம்பிசி மாணவர்கள்…. உதவித்தொகை பெறலாம்…!!

ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உதவித்தொகை பெற சிறுபான்மையினர் நலத்துறையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் செயல்படும் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம் தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |