கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று நம்மை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் பல்வேறு இழப்பை சந்தித்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். 98 நாடுகள் கொரோனா கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து நிறுவனம் ஆய்வு செய்தது.
இதில் நோய் கட்டுப்பாடு, அரசியல் செயல்பாடு, பொருளாதார நிலை பராமரிப்பு ஆகியவற்றையும் கணக்கிட்டது. 98 நாடுகளில் நியூஸிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.இங்கு உயிரிழப்பு மிகவும் குறைவு. நியூசிலாந்தை அடுத்து வியட்நாம், தைவான், தாய்லாந்து நாடுகளும் கொரோனா பரவலை தடுப்பதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த புள்ளிவிவரப் பட்டியலில் 98 நாடுகளில் இந்தியாவுக்கு 86 ஆவது இடம் கிடைத்துள்ளது.
அமெரிக்கா 94 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு என்பது தெரியவந்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிக அளவில் கொரோனா கட்டுப்படுத்த பட்டுள்ளது என்று புள்ளி விவரம் தெரிய வந்துள்ளது.