மது குடிப்பதற்கு தடை விதித்து ஊர் எல்லையில் எச்சரிக்கை பலகை வைத்து ஒரு கிராமம் தமிழகத்திற்கு முன் மாதிரியாக விளங்குகிறது.
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். மதுக்கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு மது குடிப்பதனால் பெரும்பாலான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்ற வாசகம் மது பாட்டில்களில் பொறிக்கப்பட்டு இருந்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய உயிரையும் பற்றியும் நினைக்காமல் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர்.
இந்நிலையில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வரும் நிலையில் மானாமதுரை அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராம பொதுமக்கள் தமிழகத்துக்கு முன்மாதிரியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது மது குடிப்பதற்கு தடை விதித்து ஊர் எல்லைகளில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மது அருந்துவோரை பிடிக்க இளைஞர்கள் குழுவையும் உருவாக்கியுள்ளனர்.