Categories
உலக செய்திகள்

துப்பாக்கியோடு நுழைந்த மருத்துவர்… தீடிரென செய்த காரியம்… அதிர்ந்து போன மருத்துவமனை..!!

அமெரிக்காவில் புற்றுநோய் பாதித்த மருத்துவர் சக மருத்துவரை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுபவர் Dr. Bharat Kumar(43). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெக்ஸாஸிலிருக்கும் மருத்துவமனைக்கு ஒன்றிற்கு துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருக்கும் ஐந்து மருத்துவமனை ஊழியர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து நான்கு ஊழியர்கள் தப்பித்துள்ளனர். இதனால் தன் கட்டுப்பாட்டில் இருந்த மற்றொரு குழந்தைகள் நல மருத்துவரான  Dr.Katherine Lindleyவை உடனடியாக தன் துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் அவரும் தற்கொலை செய்துள்ளார். அதாவது Dr.Bharat புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே மருத்துவர்கள் அவர் சில வாரம் தான் உயிர் வாழ முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் கடந்த வாரம் இந்த மருத்துவமனைக்கு வந்து தன்னார்வலராகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் கொடுத்துள்ளார். ஆனால் மருத்துவமனை அதனை நிராகரித்துவிட்டது.

இதன் காரணமாகத் தான் Dr.Bharat அந்த மருத்துவரை கொலை செய்தாரா? அல்லது புற்றுநோய் பாதித்ததில் விரக்தி அடைந்ததால் கொலை செய்தாரா? என்பது குறித்து தெரியவில்லை. இந்நிலையில் Dr.Bharat குடும்பத்தினர்  Dr.Katherine குடும்பத்தாரிடம் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு தங்களை மன்னிக்குமாறு  கேட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட Dr.Katherineற்கு கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இதேபோன்று Dr. Bharatற்கும் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.

Categories

Tech |